Monday, April 20, 2009

அழகு படுத்து. அசிங்கப் படுத்தாதே!

1975 ஆம் ஆண்டுக்கான் ஞான பீடம் விருது பெற்ற நூல். 

இந்திய அரசால் சிறந்த இலக்கிய படைப்புக்களுக்கு வழங்கப்படுகிற உயரிய விருது ஞான பீட விருது. 

1982 வரை இந்த விருது சிறந்த படைப்புக்காக வழங்கப்பட்டது. 

இப்பொழுது ஓர் எழுத்தாளரின் சிறந்த வாழ்நாள் இலக்கியப் பணிக்காக வழங்கப்படுகிறது.

1975 க்குப் பிறகு 2002 இல் தான் திரு. ஜெயகாந்தன் அவர்களுக்கு சீரிய வாழ்நாள் இலக்கியப் பணிக்காக வழங்கப்பட்டது.

சரி என்னதான் இந்த நூலில் உள்ளது என்ற ஆவல் எனக்குள் தோன்ற புத்தகத்தை வாங்கிப் படித்து முடித்தேன்.

இன்றும் இளமையாக உள்ளது. மூன்றாம் மனிதர் சொல்வது போன்ற நடை, படிப்பதற்கு சற்று சலிப்பைத் தருகிறது. வாங்கிப் பாதுகாக்கப் பட வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை. 

நூல் சொல்கின்ற செய்தி என்னவென்றால் 

"வாழ்க்கையை அழகு படுத்து. முடியாவிட்டால் அசிங்கப் படுத்தாமலாவது இரு"